றிலங்காவில் இறுதியுத்தத்தின் போது விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே.பி விளக்கமளிக்கவேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்தார். கே.பி கூறியிருக்கும் தகவல்களை ஆராய்ந்து எது உண்மை என்பதை கண்டறிய கேபி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் கலைஞர் தனக்கு ஒன்றும் தெரியாது மாதிரியான அறிக்கையை விட்டு, தான் ஒன்றும் தெரியாத பாப்பா என்ற தோரணையில் நாடக படப்பிடிப்புக்கு இடம் தேடத்தொடங்கிவிட்டார் போலும்.
"No Real Change in History has ever achieved by Discussions"சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !சூழ் கொடு சாகும்.
Font Size
Friday, August 27, 2010
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கருணாநிதி!
இந்தியா நினைத்திருந்தால் பல ஆயிரம் உயிர்களை சிங்;களக் காடையர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியும்இ ஆனால் இந்தியா தனது முழு ஆதரவையும் அளித்து புலிகளை எப்படியேனும் அழித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது என்பது தான் உண்மை. மேலும், இந்தியாவின் பரம எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் நேரடியாகவே சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது. ஆனால், இந்தியாவோ அவர்களுடன் கைகோர்த்து நின்று தமிழர்களை அழிக்க காரணமாகி இருந்தது. இதனை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ தயாராகவில்லை.
ராஜீவ் என்ற ஒரு மனிதனுக்காக பல ஆயிரம் உயிர்களை காவுகொண்ட இந்தியா இன்று சிங்களத்துடன் நின்றுகொண்டு தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களில் செயல்படுகின்றது என்பது தான் உண்மை. இன்றைய யாழ்ப்பாண நிலவரம் என்னவென்றால், முப்பதிற்கும் அதிகமான பேருந்துகளில் சிங்களவர்களை ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்குள் விடப்பட்டுள்ளார்கள். தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்க பல பிரயத்தனங்களை சிங்கள அரசு செய்துகொண்டிருக்கின்றது. ஆனால், இந்தியாவோ இவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு சிங்கள அரசிற்கு முழு ஆதரவையும் அளிக்கின்றது என்பது தான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையிலையே தான் நடைபெறுகின்றது.
இந்தியாவின் தமிழினத்திற்கு எதிரான செயல்கள் என்பது இன்று நேற்றல்ல நடைபெறுகின்றது. இந்தியா தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக பல காலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. அந்தமான்இ நிகோபார் தீவுகளில் ஒருகாலத்தில் தமிழர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஆனால், இந்திய நடுவண் அரசு இதனைச் சகிதித்துக்கொள்ள முடியவில்லை. பல ஆயிரக்கணக்கான பங்காளிகளை இந்த தீவுகளுக்கு அனுப்பி தமிழர்களிலும் விட பல மடங்கு அதிகரித்து ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இன்று தமிழ்நாடு இழந்து நிற்கின்றது.
இதைப்போல பல உதாரணங்களை சொல்லலாம். குறிப்பாக, மொரீசியஸ், பிஜி, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகளில் பல தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இன்று அவர்களின் மொழி தெரியாமல் தமது அடையாளத்தையையே தொலைத்து நிற்கின்றார்கள். இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக, இவர்களுக்கு ஹிந்தி வகுப்புக்களை நடாத்தி இவர்கள் இன்று தம்மை ஹிந்திக்காரர்கள் என்று சொல்லுமளவு இந்திய நடுவன் அரசு வெற்றிகண்டுவிட்டது. இப்படியாக இந்தியாவின் போக்கு இருக்கையில், தான் ஏதோ தமிழர்களின் காவலன் என்று தம்பட்டம் அடிக்கும் கலைஞரோ தமிழர்களை அழிக்க நடுவன் அரசிற்கு துணைபோகின்றார்; என்று சொன்னால்;, தாம் இராஜதந்திரங்களை பாவித்து தமிழரின் வாழ்வில் ஒரு புத்தெழுச்சியை கொண்டுவரப்போவதாக அரட்டை அடிக்கின்றார்கள். கேட்கும் ஏமாளிகள் இருக்கும் வரை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். பாவப்பட்ட தமிழ்ச்சாதியின் குணம் என்னவென்றால், உணர்சிகளுக்கு ஆளாவதும் மற்றும் ஒருவர் சொல்வதைக் கேட்டு அதனை ஏற்று ஏமாறுவதுமே தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம்.
சிலவருடங்களுக்கு முன்னர் கே.பியை இந்தியா பிடித்துவந்து ராஜீவ் கொலைக்கு அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறிய இந்தியா இன்று அவருக்கு விருந்துபசாரங்கள் அளிப்பதும் மற்றும் அவருக்கு தேவையான அத்தனை வசதியையும் செய்து அவர் மூலமாக தமது திட்டங்களை செய்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் இந்திய நடுவன் அரசிட்;கும் மற்றும் சிறிலங்கா அரசிட்கும் ஊதுகுழலாக இருக்கும் கலைஞர் நிச்சயம் ஒருநாள் தாம் செய்வதையறிந்து வெட்கித்தலைகுனியும் நாள் வெகுதொலைவிலில்லை என்பது மட்டும் உண்மை. அரசியல் பழிவாங்களுக்காக தமிழின விடுலையை விலைபேசும் எட்டப்பர்களை தூண்டி விட்டு அவர்களை வளர்ப்பதன் மூலமாக மென்மேலும் தவறுகளை இழைக்கின்றார்கள் போலும்.
Thanks
Tamilwin
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment