"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Thursday, August 19, 2010

கல்கியில் ஞானி...

நான் குமுதம் வாங்குவதே ஞானியின் ஓ பக்கங்களுகாகத்தான் குமுதம் Mr .  கருணாநிதிக்கு கூஜா தூக்க ஆரம்பித்த பிறகு ஞானி விலகியது அனைவரும் அறிந்ததே!ஆனால்அவர் இப்போது கல்கியில்


 தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.

கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்‌ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.



லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.

பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும் 

சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும். 

இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான். 

அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான். 

கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.

இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.

ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.

ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? 

உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான். 

ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும். 

இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் , என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.


  ஞானி




ஞானி அவர்களின் எல்லா கருத்துகளையும் ஏற்றுகொள்ள முடியாது ஆனால் இதனை ஏற்றுகொள்ளலாம்


ஞானி ஓல்ட் இஸ் Bold ..




இவரு ஓல்ட் இஸ் Rold






என்ன செய்வது வேலைய செய்வதா இல்லை ப்ளாக் எழுதுவதா? அதுதான் இந்த காப்பி வேலை ...ஹீ ஹீ ஹீ ..




 ஏன் எந்த ப்ளாக்கர்ரும் Mr .  கருணாநீதிக்கு சப்போர்ட் செய்ய வில்லை..

3 comments:

BoobalaArun said...

ஞானியின் பேச்சிலும் எழுத்திலும் ஒரு தெளிவு இருக்கும் என்பது என் கருத்து...

PB Raj said...

டியர் வினய்!

உங்கள் கருத்து ஓகே ஆனால் இலங்கை மீதான அவர் கண்ணோட்டம் எனக்கு பிடிக்கவில்லை..

PB Raj said...

நன்றி சார்