"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Saturday, August 28, 2010

நான் அவன் இல்லை



நான் கொஞ்சம் வித்தியாசமானவன் அதலால
விசித்திரமானவன் எல்லோருக்கும்

வெட்டி கதைகள் பேசி ஊர் வம்புகள் இழுக்கும்
உதவாகரை நான் இல்லை

அழகாக பேசி அடுத்தவனை கெடுக்கும்
அயோக்கியன் நான் இல்லை

மனதில் ஆயிரம் வக்கிரம் வைத்து
விபூதி பூசி ஊரை ஏமாற்றுபன் நான் இல்லை


அதலால் விசித்திரமானவன் எல்லோருக்கும்.

நாயிடம்  நாயாகவும், பூனையிடம் பூனையாகவும்
இருக்க என்னக்கு தெறியாது

பெண்களிடம் சிரித்து பேசி  வழிந்து வசியம் வைத்து
காரியம் சாதிக்க என்னக்கு தெறியாது

அடுத்தவர் தோளில் ஏறி அவன் தயவில்
வாழ  என்னக்கு தெறியாது

வீதியோர கட்டைகளில் அமர்ந்து விரசங்கள் பேசி கேலிகள் செய்ய என்னக்கு தெறியாது

அதலால் விசித்திரமானவன் எல்லோருக்கும்

கட்டியவலை ஊரில் விட்டு கட்டரட்ட வாழ்கை வாழ
என்னாலும் முடியும்

பான் பராக்கு மென்று கலகங்கள் செய்து கண்டதை பேசி
கட்சிக்கு கொடி பிடிக்க என்னாலும் முடியும்


வருமானத்தை வங்கியில் சேமித்து வட்டிகள் கட்டாமல் வாடகை இல்லாமல் வளமாக வாழ என்னாலும் முடியும்

பாசாங்கு பாசம் காட்டி பழி இழி சொற்கள் பேசி
பாவியாய் வாழ என்னாலும் முடியும்

தவறாக எதுவும் செய்யவில்லை
அதலால் விசித்திரமானவன் எல்லோருக்கும்


வெந்ததை தின்று கண்டதை சுவைத்து
கண்ணியம் காப்பதால் 
விசித்திரமானவன் எல்லோருக்கும்


பத்தோடு ஒன்றாக என்னால் முடியாது 
காலங்கள் மாறலாம் கட்சிகள் மாறலாம்
மாற்றங்கள் காலத்தின் நியதி
ஆனால் நாம் மாறுவது எப்போது?

2 comments:

priyamudanprabu said...

நச்சுனு சொல்லிட்டிங்க
இப்பெல்லாம் வரிசையில் சரியாக நின்று காத்திருந்து போனால் முட்டாளாகவும் , இடையில் நுழைந்து போனால் அறிவாளியாகவும் பார்க்க படுகிறது , ஒருகாலத்தில் வெளியில் நல்லவனாக நடிக்க வேண்டியிருந்தது , ஆனால் இப்பூ அவர் அவர் மனதிற்கு குஉட நல்லவனாக இருக்க விரும்புவதில்லை பலர்


.

///
கட்டியவலை//

ளை

PB Raj said...

நன்றி பிரபு