பெரிதாக ஒன்றும்செய்யவில்லை உனக்கு
ஆசைகள் ஆயிரம் பிரச்சனைகளும் ஆயிரம்
காலமும் கனியும் என் ஆசையும் முடியும்.
சுயம்பாக வாழ்வதால் சுறாவளியாய் என் வாழ்கை
சுயமாக சிந்திப்பதால் சில சமயம் சூழ்நிலை கைதி.
எனக்கு வாழ்கை தந்த பிரம்மா நீ....
நான் அதிகம் நேசிக்கும் ஆத்மா நீ.....
உன்னால் தான் மனிதன் ஆனேன்
உன்னால் தான் மனிதம் கற்றேன்
நான் நாத்திகன் ஆக நீயும் ஒரு காரணம்
நீதானே என்னக்கு புத்தகங்களையும் தின வார பத்திரிகைக்களையும்
அறிமுகம் செய்தாய்,உலகத்தை புரியவைத்தாய்!
காலை காபிக்கு முன்னரே பத்திரிகை படித்தோம்
பாட புத்தகதுக்கு முன்னமே தின செய்தி படித்தோம்
எதிரியான சொந்தகளின் பிள்ளைகள் நம் வீட்டு திண்னையில்
புத்தகம் படிக்க அப்போது.
மைத்துனன் உதவி இல்லை
மாமனார்வீடு இல்லை
ஆனால்
சுயமாக வாழ்ந்தாய் மானத்தோடு வாழ்ந்தாய் ,
உன் மூட்டுக்கள் தேய்ந்த காரணம் நீ மிதித்த மிதிவண்டிக்குதான் தெரியும்
அந்த மிதிவண்டியின் பெடல் ஓசை இன்னும் என் காதுகளில்...
அதிகாலை வயல் வேலை பிறகு ஆசிரியர் பணி என்று நீ பசியோடு ஓடிய நாட்கள் என்னக்கு தெரியும்.
வட்டி வாங்கிய ஆசிரியர்களுக்கு இடையே வட்டி கட்டியவன் நீ....
கடினமான சமயங்ககளில் கூட சொந்தங்களுக்கு உதவியவன் நீ....
தவறுகள் சில செய்தாலும் நீ தந்த சுதந்திரம் என்னை திருத்தியது
வயதுக்கே உரிய தவறுகள் சில நான் செய்தாலும்
உன் பிம்பம் என்னை உருத்தியது! திருத்தியது!
களவுகள் செய்தது இல்லை,பெரும் தவறுகள் செய்தது இல்லை,
கண்ணியம் தவறியதில்லை காரணம் நீ....
"தவமாய் தவமிருந்து " படத்தில் பார்த்த நாயகன் நீ....
தூரத்தில் நான் என் நினைவுகள் உன்னை சுற்றி
எனக்கு முதன்மையான சொந்தம் நீ
உரிமையானை சொந்தம் நீ
இளமையும் கடந்தன ,கடமைகள் முடித்தன
உன்னோடு வாழதான் ஆசை என்ன செய்ய காலத்தின் கட்டாயம்
காலமும் கனியும் என் ஆசையும் முடியும்.
நம்பிக்கை இல்லை மறு ஜன்மத்தில் இருந்தால் உனக்கே பிறக்க வேண்டும் நான் மகனாக.........மீண்டும்


8 comments:
நன்றாகவே எழுதறீங்க... அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் கவிதை..
அவருக்கு எனது வணக்கங்களும்..
நன்றி உங்கள் அன்புக்கு அதோ நம்மலல் முடிந்தது
கவிதை நல்லா இருக்கு ராஜ்
i miss u , dad...
@நந்தா ஆண்டாள்மகன்நன்றி நந்தா
@WiNnYநன்றி வினய்
Very nice...
nice post
we cannot show all the things in words
http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post_22.html
Post a Comment