"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, August 22, 2010

ஞானியின் கும்மாங்குத்து....



உயர்திரு ஞானி அவர்கள் கல்கியில் குத்திய குத்துகள் உங்கள் பார்வைக்கு


அண்மையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கரை கருணாநிதி அரசு தற்காலிக நீக்கம் செய்து அவர் மீது சாதிச்சான்றிதழ், சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதைப் பலரும் கண்டித்தார்கள். ஜெயலலிதாவும் கண்டித்தார். தன் ஆட்சியின் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்த உமாசங்கரை ஜெயலலிதா நேர்மையானவர் என்று ஒத்துக்கொள்வது தன் ஆட்சியின் குற்றத்துக்கே ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்குச் சமம்தான். 
ஜெயலலிதாவின் கண்டனத்துக்குப் பதில் சொன்ன தமிழக அரசு, உமாசங்கரே எழுப்பியுள்ள பிரச்னைகளுக்கு பதில் சொல்லவில்லை. தம் மீதான அரசு நடவடிக்கைகளுக்குத் தடை கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். எனவே அந்த விவரங்களுக்குள் நாம் போக வேண்டிய தில்லை.
               
அதே சமயம் உமாசங்கர் தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்திடம் தமிழக முதலமைச்சர், அவரது குடும்பத்தினர் ஆகியோரிட மிருந்து தனக்குப் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் அவர் தெரிவித் திருக்கும் விஷயங்கள் பொய்யாக இருந்தால் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது (தன் மீது தானே!) நடவடிக்கை எடுத்தாக வேண்டும். உமாசங்கர் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது.







கேள்வி 1: 
அ.தி.மு.க ஆட்சியின்போது நடந்த சுடுகாட்டுக் கூரை ஊழலில் உமாசங்கர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஏன் இதுவரை அந்த ஊழலில் சிக்கியவர்கள் மீது தி.மு.க அரசு தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை?







கேள்வி 2: 
1996ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் ஜாய்ண்ட் விஜிலன்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் பல ஊழல்கள் பற்றி உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி அறிக்கைகள் கொடுத்திருக்கிறார். 1.) சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் பங்குகள் விற்பனையில் 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட விவகாரம். 2.) கிரானைட் சுரங்க குத்தகைக்குக் கொடுத்ததில் 1000 கோடி ரூபாய் இழப்பு. 3.) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மனைகளையும் வீடுகளையும் கற்பனையான பெயர்களில் ஒதுக்கீடு செய்த விவகாரம். 4.) கோவை மருத்துவக் கல்லூரியின் 20 ஏக்கர் நிலத்தை மகளிர் குழந்தை நலம் என்ற போலி சாக்கில், தனியார் கிளப்புகளுக்குக் கொடுத்த விவகாரம். 5.) மேகமலை வனப்பகுதியில் 7106 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்துக்குச் சட்ட விரோதமாகப் பட்டா போட்டுக் கொடுத்தது. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது உமாசங்கர் அறிக்கை கொடுத்திருக்கிறார். ஒன்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?







                                            
கேள்வி 3:
மறுபடியும் 2006ல் தி.மு.க ஆட்சியில் உமாசங்கர் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப் போது அவரைத் தம் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி முதலமைச்சரின் துணைவி ராஜாத்தி அம் மாள் தெரிவித்ததாகவும், இரு முறை சந்தித்ததாகவும் உமாசங்கர் தெரிவிக்கிறார். அப்போது மீனவர்களுக்கான 45 ஆயிரம் வயர்லெஸ் செட்டுகள் வழங்கும் ஒப்பந்தத்தைத் தாம் சொல்பவர்களுக்குத் தருமாறு ராஜாத்தி அம்மாள் வற்புறுத்தியதாகவும் தாம் அதற்கு உடன்பட மறுத்து விட்டதாகவும் உமாசங்கர் கூறியிருக்கிறார். அரசு அதிகாரிகள் யார் யாரைச் சந்திக்கலாம், எங்கே சந்திக்கலாம் என்று விதிகள் உண்டா? சந்திப்புகளுக்குப் பதிவுகள் உண்டா? இந்தச் சந்திப்புகள் பற்றி அரசு கார் லாக் ஷீட்டுகளில் பதிவுகள் உண்டா? உளவுத்துறை, காவல்துறையிடம் தினசரி முதலமைச்சரை, அவரது நெருங்கிய உறவினர்களை அரசு அதிகாரிகளோ பிறரோ சந்திப்பது பற்றிய பதிவுகள் உண்டா? உமாசங்கர் - ராஜாத்தி அம்மாள் சந்திப்பு பற்றி அரசின் நிலை என்ன?







கேள்வி 4:
தமிழக அரசுக்குச் சொந்தமான எல்நெட்டின் தலைவராக உமா சங்கர் இருந்தபோது எல்நெட்டுக்குச் சொந்தமான 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ஈ.டி.எல். நிறுவனம் திடீரென்று வேறு தனியார் கைக்கு சட்ட விரோதமாக மாறியதை வெளிப்படுத்த உமாசங்கர் நடவடிக்கை எடுத்தபோது, அவர் பதவி யிலிருந்து மாற்றப்பட்டதாகச் சொல்லுகிறார். ஈ.டி.எல் நிறுவனம், எல்காட் கை விட்டுப் போனது எப்படி, ஏன், யாரால் என்பதை அரசு தெரிவிக்குமா?







கேள்வி 5:
 அடுத்தபடியாக 2008ல் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனைத் தொடங்கிய போது உமாசங்கரை அதன் நிர்வாக இயக்குநராக முதலமைச்சர் நியமித்தார். முன்னர் ஈ.எல்.டி. முறைகேட்டில் தொடர்பு டைய ஐ.ஏ.எஸ் அதிகாரி இங்கே தமக்கு மேலதிகாரியாக இருப்பதால், அவர் கீழ் தாம் பணியாற்ற முடியாது என்று முதல்வரிடமே உமாசங்கர் சொன்னதாகக் கூறுகிறார். இந்தக் கோரிக்கையை ஏற்று, அந்த அதிகாரியை வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டு உமா சங்கரை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொறுப்பை முதல்வர் ஏற்கச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார். இது பற்றி அரசின் நிலை என்ன?





                                       
கேள்வி 6:


கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பொறுப்பில் தாம் இருந்தபோது, அரசுக் குச் சொந்தமான கேபிள்களை வெட்டி நாசமாக்கி கிரிமினல் செயல்களில் ஈடுபட்டதற்காக தனியார் கேபிள் டி.வி அதிபர்களான மாறன் சகோதரர்கள், அமைச்சர் பொங்கலூர் பழநிச்சாமி ஆகி யோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துக் கைது செய்ய வேண்டுமென்று அரசுக்கு அறிக்கைகள் பல முறை அனுப்பியதாக உமாசங்கர் சொல்லியிருக்கிறார். அந்த அறிக்கைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? 







இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதியால் எழுப்பப் படவில்லை. இருபது வருடங்களாக அரசுப் பணியில் இருந்துவரும் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியால் எழுத்து பூர்வமாக, தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் முன்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரிய, நம் ஆழ்ந்த அக்கறைக்குரிய விஷயம். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அரசு மேலே எழுப்பப்பட்டிருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான நேர்மையான பதில்களை மக்களுக்கு அளிப்பது அவசியம்.







மூடப்பட்ட அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை மறுபடியும் தொடங்குங்கள் என்று கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அண்மையில் கோரினார். அதற்குப் பதில் அறிக்கை அளித்த முதல மைச்சர், மூடினால்தானே மறுபடியும் திறப்பதற்கு என்று கேட்டார். அரசு கேபிள் டி.வி நிறுவனம், அது அரசு நிறுவனம் என்பதால் அடக்க மாகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது என்று சொன்னார். இதே அடக்கம் ஏன் அரசின் இதர நடவடிக்கைகளில் மட்டும் இல்லை என்பதை அவர்தான் விளக்கவேண்டும். தமிழில் அடக்கம் என்பதற்குச் சமாதி என்றும் ஒரு அர்த்தம் உண்டு. முத்தமிழ் அறிஞர் என்பதால் சிலேடையாகச் சொல்லியிருக்கலாமோ என்னவோ... 







அரசு கேபிள் டிவியிடம் மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகள் இருப்பதாகவும் சென்ற வாரம் முதலமைச்சர் தெரிவித்தார். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதைவிட மோசமானது. ‘தினமதி’ தினசரியின் பத்திரிகையாளர் வி.அன் பழகன் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதே முதலமைச்சர் கீழ் இயங்கும் தமிழக அரசிடமிருந்து பெற்றிருக்கும் தகவல்கள் இதோ: 







தஞ்சாவூர், கோவை, நெல்லை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் அரசு கேபிள் டி.வி தொடங்கப்பட்டது. தஞ்சைக்கு ரூ 7.30 கோடி. கோவைக்கு: 6.78 கோடி. நெல்லைக்கு: ரூ 6.74 கோடி. வேலூருக்கு: ரூ 5.56 கோடி முதலீடுகள். இங்கெல்லாம் மாதாந்தர அலுவலக வாடகை: தஞ்சை ரூ 57,730. கோவை: ரூ 38,500. நெல்லை: ரூ 87,358. வேலூர்: ரூ 42,450. நவம்பர் 10, 2009ல் இருந்த நிலைப்படி, தஞ்சையில் எம்.எஸ்.ஓ எனப்படும் ஒரு சர்வீஸ் ஆபரேட்டர் கூட அரசு கேபிள் டிவியுடன் கிடையாது. தனி கேபிள் ஆபரேட்டர்கள் 32 பேர். மொத்த இணைப்புகள்: 7703. கோவையில் ஒரே ஒரு எம்.எஸ்.ஓ. ஆறு ஆபரேட்டர்கள். மொத்த இணைப்புகள்: 2300. நெல்லையில் எம்.எஸ்.ஓ இல்லை. மூன்று ஆபரேட்டர்கள். 351 இணைப்பு கள். வேலூரில் எதுவும் இல்லை. 







ஆகமொத்தம் இணைப்புகள் வெறும் 10 ஆயிரத்து 354தான். எந்தக் காலத்திலும் 50 ஆயிரம் இணைப்புகள் அரசு கேபிள் டிவி வசம் இருந்ததே இல்லை. முதலமைச்சர் தெரிவித்த 50 ஆயிரம் என்பது முழுப் பொய் என்று அவருடைய அரசின் இன்னொரு துறையே நிரூபிக்கிறது.







இப்போதைய நிலை என்ன என்று அன்பழகன் துருவியதில் ஏப்ரலுக்குப் பின்னர் தஞ்சையில் எல்லாம் மூடப்பட்டு விட்டன. சாதனங்களைச் 







சென்னை அலுவலகத்துக்கு அனுப்பியாயிற்று. நெல்லையிலும் எதுவுமில்லை. கோவையில் 3 ஆபரேட்டர்கள். மொத்தம் வெறும் 600 இணைப்புகள். சென்ற வாரம் அரசு கேபிள் டி.வி நிறுவனத்திடம் இருக்கும் பணத்தை அரசுக்குத் திருப்பி அனுப்பும் படி உத்தரவு போயிற்றாம். சுமார் நூறு கோடி ரூபாய் வரை இதுவரையில் செலவழித் திருக்கும் நிறுவனம் 19 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்திருக்கிறது.







முதல்வர் அவர்களே, உண்மைகளைச் சொல்ல விரும்பாவிட்டால், மௌனமாக இருங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம். தயவுசெய்து அரை உண்மைகளையும் முழுப் பொய்களையும் எங்கள் மீது திணிக்காதீர்கள்.



பதிவுலக நன்பர்களே மேற்கண்ட திரு ஞானியின் பதிவை உங்கள் ப்ளாக்கில் பதிவு இடுங்கள் உழலுக்கு எதிராக கொஞ்சம் போறாடுங்கள்..

                                                 
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்...



5 comments:

Unknown said...

எல்லோரும் தினமும் முதல்வர் என்ன பன்றார்ன்னு (அவர் வாய) பார்த்துகிட்டு இருந்தா, நாம் நம்ம வேலைய எப்போங்க பார்க்கிறது !!!

PB Raj said...

உங்களுக்கு என்ன வரி கட்டுற எங்களுக்குதான் தெரியும் வலி .

Guru.Radhakrishnan said...

The legend and its end on the recent assembly election no body is able to say what was happend in the past ministry. The DMK leader allways telling by his talented tamil versions to those raising the true situations.Ir is the fate of tamilpeople.They have given their votes against DMK.

Guru.Radhakrishnan said...

The legend and its end on the recent assembly election no body is able to say what was happend in the past ministry. The DMK leader allways telling by his talented tamil versions to those raising the true situations.Ir is the fate of tamilpeople.They have given their votes against DMK.

Guru.Radhakrishnan said...

The legend and its end on the recent assembly election no body is able to say what was happend in the past ministry. The DMK leader allways telling by his talented tamil versions to those raising the true situations.Ir is the fate of tamilpeople.They have given their votes against DMK.