லட்சுமி என்றோர் ஆலமரம்!என்ற தலைப்பில் அவள் விகடனில் வெளியாகி உள்ளது பழம்பெரும் நடிகை S.N .லட்சுமி அவர்களின் பேட்டி
மகாநதி,தேவர்மகன் திரைப்படம்கள் வெளியான போது என்னக்கு பரிச்சியம்யானவர் இவர் குரலும் இவரின் யதார்மான நடிப்பும் என்னக்கு மிகவும் பிடித்தது கமல் நடித்த பல திரைபடகளில் இவர் நடித்துள்ளார்.இந்த வயதிலும் பல தொலைகாட்சி நாடகங்களில் நடித்து கொண்டுள்ளார்.
சன் டி.வி-யில் வரும் 'விகடன் டெலிவிஸ்டாஸ்'-ன் 'தென்றல்' சீரியலில் பேத்தி படும் வேதனையைப் பார்த்து, புயலாக சீறும் பாட்டியைப் பாராட்டாத தமிழ் சீரியல் நேயர்களே இல்லை. அசதி வருத்துகிற இந்த எண்பது வயதிலும், அசராமல் நடித்து அசத்தி வருகிற எஸ்.என்.லட்சுமியின் நினைவு அடுக்குகளில் பதிந்து கிடக்கின்றன திரை உலகில் அவரின் மூன்று தலைமுறை அனுபவங்கள், பொக்கிஷமாக!சூப்பர் பாட்டியின் பேச்சு முழுக்க நிரம்பியிருந்தது உற்சாகம்; திருமணமே செய்துகொள்ளாத அவர் வாழ்க்கை நெடுக நிரம்பியிருந்தது தியாகம்
விருதுநகர் பக்கத்துல சென்னல்குடிங்கிற சின்ன கிராமம்தான் சொந்த ஊர். அப்பா நாராயண தேவர், ராஜா கம்பளத்து நாயக்கர் அரண்மனையில நிர்வாகம் பண்ணிட்டிருந்தாரு. எங்க வீட்டுல ரெண்டு பொண்ணு, பதினோரு ஆணுனு மொத்தம் 13 புள்ளைங்க (அட, 13-ம் ஆண்டு சிறப்பிதழ்ல மிஸ்ஸாயிட்டீங்களே!). நான்தான் கடைக்குட்டி. நான் பொறந்தப்போ, அப்பாவுக்கு வேலை போயிடவே... வீட்டுல ஒரே வறுமை. சாப்பாட்டுக்கே வழி இல்லாம, பஞ்சம் பிழைக்க பக்கத்து டவுனுக்கு வந்தோம். அப்பா, எங்கள அநாதரவா விட்டுட்டுப் போயிட, அம்மாவால எங்க பதிமூணு பேரோட பசியை ஆத்த முடியல. அப்ப பதினஞ்சு வயசிருக்கும். குடும்பச் சூழ்நிலைய நினைச்சு, ரோட்டுல நின்னு அழுதுட்டு இருந்ததைப் பார்த்த ஒரு அம்மா... 'எங்கூட மெட்ராசுக்கு வர்றியா?'னு கேட்டப்போ, சட்டுனு டிரெயின் ஏறிட்டேன் வீட்டுல சொல்லாமலே'' என்றவரை, மதராசப்பட்டினம்தான் அடைக்கலப்படுத்தி இருக்கிறது
ஆயிரம் விளக்கு பகுதியில ஒரு வீட்டுல வேலைக்குச் சேர்த்து விட்டாங்க அந்தம்மா. அப்போதான் ஜெமினி ஸ்டூடியோவுல வேலைக்கு ஆள் எடுக்கறாங்கனு பரவலா பேசிக்கவே, ஸ்டூடியோவுக்குப் போனேன். அங்க இருந்த வெங்கட்ராம அய்யர், 'உனக்கு என்ன தெரியும்?'னு கேட்டாரு. 'நல்லா நீச்சலடிப்பேன். கும்மி, கோலாட்டம் ஆடுவேன்'னு சொன்னேன். என்ன நெனச்சாரோ, வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு. மாசம் 60 ரூபாய் சம்பளம். 1948-ல வந்த 'சந்திரலேகா' படத்துல, பிரமாண்ட டிரம் பாட்டு செம ஃபேமஸ். அதுல மூணாவது டிரம்ல நானும் ஆடியிருப்பேன்'' என்று பெருமிதத்தோடு சொன்னவர் ,பதினெட்டு வயசு பெண்ணுக்கு என்னவெல்லாம் ஆசைஇருக்குமோ, அது எதுவுமே அப்ப எனக்கு இல்ல. நிறைய சம்பாதிக்கணுங்கற நெனப்புதான் இருந்துச்சு. நாடகங்கள்ல நடிச்சேன். 'தாமரைக்குளம்', 'சர்வர் சுந்தரம்'னு படங்கள்லயும் வாய்ப்புகள் கிடைச்சது. நிஜத்துல பூனையைப் பார்த்தாகூட பயப்படறவ நான். ஆனா, 'பாக்தாத் திருடன்' படத்துல குழந்தையைக் காப்பாத்தறதுக்காக நிஜ புலிகூட சண்டை போட்டேன். எம்.ஜி.ஆரே வியந்து பாராட்டினாரு'' என திரையுலக ஆச்சர்யங்களுக்கு நடுவே, தன் குடும்பத்தையும் சந்தித்திருக்கிறார்.''எட்டு வருஷம் கழிச்சு என் அம்மா, உடன் பிறந்தவங்களைப் பார்க்க ஆசையோட, அழுகையோட போனேன். என்னைக் கட்டிப் பிடிச்சு கதறிட்டாங்க எங்கம்மா. எனக்கும் வரன் பார்த்தாங்க. ஆனா, அதுல நான் விருப்பம் காட்டல. 'செல்வி லட்சுமி'யாவே இருந்துட்டேன்'' என்றவர்
கூடபொறந்த பன்னிரண்டு பேரும் மேல போயிச் சேர்ந்துட்டாங்க. இப்போ அவங்க பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு எல்லாருக்கும் மிச்சமிருக்கற ஒரே ஜீவன் நான்தான். ஒரு காலத்துல வறுமைக்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிட்டாலும், தொடர்ந்து ஒரு ஆலமரமா அவங்களை எல்லாம் தாங்கின... தாங்கிக்கிட்டிருக்கற திருப்தி இருக்கு எங்கிட்ட!'' என்றபோது, லட்சுமியின் வார்த்தைகளில் நெகிழ்ச்சியின் ஈரம்!தொடர்ந்தவர், திரையுலக அனுபவங்களால், சூழலை கலகலப்பாக்கினார். '' 'தொழிலாளி' படத்துல எம்.ஜி.ஆருக்கு அம்மாவா நடிச்சேன். அதுல எம்.ஜி.ஆர். என் காலை பிடிக்கற மாதிரி ஒரு ஸீன் வரும். அவர் கால்ல விழும்போது நான் தள்ளிப் போயிட, 'என்னை உங்க புள்ளையா நினைச்சுக்கோங்க'னு சொன்னதோட, அங்க இருந்த ஸ்டில் கேமராமேன் நாகராஜ ராவைக் கூப்பிட்டு, 'போட்டோ எடுங்க'னு சொல்லி, அதை எனக்கு கொடுத்தும் அனுப்பினாரு. எம்.ஜி.ஆர்... பாசத்துல பிதாமகன்! நடிகர் திலகம் சிவாஜிகூட நடிக்கும்போது, 'நீங்க நின்னீங்கனா எனக்குதான் கால் வலிக்கும். உட்காருங்கம்மா'னு சேரை இழுத்துப் போடுவாரு
ஜெயலலிதா, ஸ்டூடியோவுல யாரையும் அனுமதிக்காத தன்னோட அறையில, 'நீங்க இங்கயே டிரெஸ், மேக்கப் பண்ணிக்கோங்கம்மா'னு சொன்ன அவங்களோட அக்கறைய இன்னும் என்னால மறக்க முடியல. சரோஜாதேவி, விஜயகுமாரி, வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா எல்லாம் இப்பவரைக்கும் என் மேல பாசத்தைப் பொழியற அன்பு செல்லங்க. ரஜினி, கமலஹாசன்னு இன்னிக்கு இருக்கற தலைமுறையும் என்கிட்ட பாசமாவே இருக்கறாங்க!'' என்று சினிமா பேசிய லட்சுமி,
''சினிமாவுல என் அறிமுகம் எஸ்.எஸ். வாசனோட 'சந்திரலேகா'... சீரியல் அறிமுகம் விகடன் டெலிவிஸ்டாஸோட 'தென்றல்'! அப்புறம் 'முந்தானை முடிச்சு' (சன்.டி.வி.), 'உறவுக்கு கை கொடுப்போம்' (கலைஞர் டி.வி.)னு ஓடிட்டேயிருக்கேன்'' என்ற லட்சுமி, ''இன்னிக்கு ஞாயித்துக்கிழமையில்ல... டிரைவரை வரச் சொல்லி, சாய் கிருபா மெடிக்கல் சென்டருக்குப் போகணும். ஏழைப் பிள்ளைங்களுக்கு என்னால ஆன உதவியை செஞ்சுட்டு இருக்கேன்!''
நன்றி:அவள் விகடன்
S.N .லட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை ,இன்னொரு நடிகை கதை அல்ல நிஜம் லட்சுமிக்கு எத்தனை திருமணம் ?

2 comments:
<< S.N .லட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை ,இன்னொரு நடிகை கதை அல்ல நிஜம் லட்சுமிக்கு எத்தனை திருமணம் ? >> இது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம்.. Very immature and unfortunate comments.
தமிழ் பையன்
ஒத்துகொள்கிறேன் .
Post a Comment