"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, August 12, 2018

RIP-கலைஞர் கருணாநீதி

இருக்கட்டும்
நீ கடவுளை மறுத்ததும்!
மூடர்கள் உனை வெறுத்ததும்!

இருக்கட்டும்
நீ இருமணம் புரிந்ததும்
இதனால் உலகம் உனை இகழ்ந்ததும்!

இருக்கட்டும்
கவிஞர்கள் சாமரம் வீசியதும்!
உழலில் நீ சமரசம் செய்ததும்!

இருக்கட்டும்
நீ மானாட மயிலாட கண்டதும்!
அதனால் ஈழத்தை நாம் இழந்ததும்!

இருக்கட்டும்
நீ கையறுநிலையில் இருந்ததும்!
2Gயில் விஞ்ஞான ஊழல் செய்ததும்!

ஆனாலும்
நீ எப்போதும் வேண்டும்!
இப்போதும் வேண்டும்!
மேலோர் மயிர் பிடித்து
மானுட சமன்நிலை காக்க !
பெரியார் கைபிடித்து நடக்க....
++++++++++++++++++++++++++++++++
அத்தனை கடவுள்களையும்!
வென்றவன் நீ!
போய்வா! தமிழே!
உன்னால்
தூக்கமற்று போனவர்கள்
கொஞ்சம் தூங்கட்டும்!


0 comments: