"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Thursday, November 4, 2010

சிங்கப்பூரில் தீபாவளி


பொ
துவாக திருவிழா பண்டிகைகளின் மீது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை இருந்தாலும் குடுபத்திற்க்காக வேலைகளுக்கு நடுவில் நேற்று தீபாவளி பொருள்கள் வாங்குவது தொடர்பாக   லிட்டில் இந்திய சென்று வந்தோம் போகும்போது வாடகை கார்  வரும் போது  தொடர்வண்டி என் முடிவு செய்து பயனபட்டோம், ஏனனில் என்னிடம் மோட்டர் சைக்கிள் மட்டுமே உள்ளது இந்தியாவை போல் 3  பேர் பயணம் செய்ய முடியாது சிங்கபூரில் கார் வாங்குவதும் அதை பராமரிப்பதும் கடினம் அதனால் கார் வாங்குவது எட்டா கனியாகவே உள்ளது வாங்க நினைத்தாலும  பார்க்கிங்க்கு அலைவதை பார்க்கும போது எந்த எண்ணமே மறைந்துவிடுகிறது. இருந்தாலும் கார்களின் எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை .


பொதுவாக சிங்கபூரில் 20 கிலோ மீட்டர் தூரம் கடக்க அதிகபட்சம் 20 நிமிடங்கள் ஆகும் ஆனால் இந்த Peak Hour Trafic Jam ஆல் 1 மணிநேரத்துக்கு மேலாக பயணம் 27 டாலர்கள் டாக்ஸி வாடகை 13 டாலர் ஆகும் வாடகைக்கு 27 டாலர்கள் .பண்டிகை, திருவிழா என எல்லா மக்களும் கொண்டாடும்போது என்னக்கு மட்டும் என்னவோ இதுல்லாம் அபத்தமாகவே தோன்றும் சிறுவயதில் பண்டிகை, திருவிழாக்களை  கொண்டாடிய நினைவு ,கொஞ்சம் வளர்த்த பிறகு பண்டிகை, திருவிழாக்களை கொண்டாடியது இல்லை எங்கள் வீட்டில் தீபாவளிக்கு மட்டும்தான் புது துணி எடுப்பார்கள் எங்கள் தாய்மாமா வீட்டில் இருத்தும்  புது துணிவரும் கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அதுவும் இல்லை 

புது மாப்பிளை சோக்கு மாதிரி புத்தாடை அணித்து பண்டிகை கொண்டடுவதுக்கு என்னக்கு  வெட்கமாகாக இருக்கும்  ஆதலால் பண்டிகை நாட்களில் புத்தாடை அணிவது இல்லை , புத்தாடைகுறித்து நினைத்த உடன் புத்தாடைக்காக சிறுவயதில் அலைந்த  நினைவுகள் வருகிறது.

அப்போதல்லாம் இப்போது இருப்பது போல ரெடிமேட் துணிகள் அவ்வ்வளவாக கிடையாது எனது தந்தை ஆசிரியர் ஆதலால் என்டக்ஸ் அல்லது கோ-ஆப்டெக்ஸ் துணிக்கடையில் தவணை முறையில் துணியாக எடுத்து தையல் கடையில் தைக்க கொடுப்பார்கள் என் தந்தையின் மாணவர் ஒருவரின் தையல் கடையில்தான் எப்போதும் தைக்க கொடுப்பது வழக்கம் ஆனால் அவர் எங்களை அலைய விடாமல் தைத்து கொடுத்தது இல்லை  நிறைய முறை தீபாவளி காலையில்தான் தைத்து கொடுப்பார் சில சமயம் வீட்டில் வந்து கொடுத்து செல்வார் ஆனால் என் தந்தை அவரிடம்தான் மீண்டும் மீண்டும் தைக்க கொடுப்பார் நான் அவருக்காக சில சமயம் காஜா கட்டியதும் உண்டு. பாவம் தையல்காரர் எல்லோருக்கும் இவர் சட்டை தைத்து கொடுப்பார் ஆனால் அவரின் குடுபத்துக்கு எங்கோ ரோட்டில் விற்கும் துணிகளை தீபாவளி அன்று காலையில் வாங்கி செல்வார்

தீபாவளி என்றால் புத்தாடைகளும் பட்டாசும் மட்டுமே என்னக்கு தெரியும் ஏன் தீபாவளி எதக்கு தீபாவளி என தெரியாது காரணம் தெரித்த பிறகு என்னக்கு தீபாவளி இல்லாமல் போய் விட்டது என் தந்தை எங்களுக்கு வாங்கும் பட்டாசுகளை எனக்கும் என் அண்ணனுக்கும் சரி பாதியாக பிரித்து கொடுத்து விடுவார்கள் நான் அன்றே எல்லாத்தையும் வெடித்து விடுவேன் ஆனால் என் அண்ணன் அடுத்த தீபாவளி வரை வெடிக்காமல் வைத்து இருப்பான்.வெடித்த பட்டாசு தூசுகளை சுத்த படுத்தத்யாரையும் விட மாட்டேன் இரவானால் அடுத்த வீட்டில் வெடித்த பட்டாசு தூசுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு பெருமை அடித்து கொண்ட நாட்களும்உண்டு.

இப்படியாக என் சிறுவயது தீபாவளி நாட்கள் கடந்தன பிறகு சில காலங்கள் விரும்பாத கொண்டாடாத தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாட வேண்டிய சூழ்நிலை காரணம் என் மகள்

தாய் சொல்லி கேட்காத மனது
தந்தை சொல்லி கேட்காத மனது
துணைவி சொல்லி கேட்காத மனது
பகுத்தறிவு தடுத்தாலும்
 மகளுக்காக விட்டு கொடுக்கிறது 



சிங்கப்பூரில் தீபாவளி...
Tekka Market- First Floor


Tekka Market- First Floor

     
Tekka Market- First Floor


Tekka Market- First Floor



Tekka Market- First Floor


Campbell Lane-தீபாவளி சந்தை


Campbell Lane-தீபாவளி சந்தை



MRT _Train







9 comments:

மாணவன் said...

அருமை நண்பரே,
உங்களது அனுபவங்களை அனுபவங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்

புகைப்படத்தொகுப்பும் அருமை...

”தாய் சொல்லி கேட்காத மனது
தந்தை சொல்லி கேட்காத மனது
துணைவி சொல்லி கேட்காத மனது
பகுத்தறிவு தடுத்தாலும்
மகளுக்காக விட்டு கொடுக்கிறது”

மனதை தொட்டது

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

எஸ்.கே said...

மிக அருமையான அனுபவங்கள், படங்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

போளூர் தயாநிதி said...

ungalukku pidikkavillai ungal magalukku pidikkirathu ungal magalukku ungalukku pidika karanaththai solla lame avar ketka mattara enna?
polurdhayanithi

மதுரை சரவணன் said...

புகைப்படங்களுடன் நினைவலைகளைப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.

PB Raj said...

நன்றி மாணவன்

சிங்கபூரில் எங்கு உள்ளீர்.

PB Raj said...

நன்றி S.K

PB Raj said...

நன்றி மதுரை சரவணன்

Unknown said...

சிங்கப்பூரில் தீபாவளி பிரமாதமாக இருக்கும்.. நானும் தீபாவளி கொண்டாடுவதில்லை, மகன்களுக்காக இந்த முறை சற்று தளர்த்திகொண்டேன்.. புத்தாடைகள் மட்டும் அணிய அனுமதி கொடுத்தேன்.. நான் வழக்கம்போல்தான் ..

PB Raj said...

ஆமாம் செந்தில்

நம் கருத்துகளை நம் குழந்தைகள் மீது திணிக்க வேண்டியது இல்லை அவர்களுக்கு புரியும் போது அவர்கள் மாறட்டும்.