"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Sunday, August 28, 2011

வெங்காயம்-மரமண்டையர்கள் பார்க்க வேண்டிய படம்




           வெங்காயம் திரைப்படம் மூட நம்பிக்கையால் பாதிக்கபடும் மக்களுக்கான படம் ஆனால் மூடநம்பிகையை நம்பும் மக்கள் இதை பார்ப்பார்களா என்பது சந்தேகமே,

            ஜோசியம் சொல்கிறேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்ற்றும் கயவர்களை கடத்துவதும் அவர்களை பிடிக்க காவல்துறை முயல்வதும்தான் கதை.இந்த படத்தைபார்க்கும்போது உங்களுக்கு உங்கள் ஊரில் நடத்த நிகழ்வுகள் கண்டிப்பாக  நினிவு வருவது உறுதி.ஆனால் என்னகு என்வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது..

            கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு என் அண்ணன் சொந்தமாக தொழில் செய்ய முயலும்போது ஜோசியம் பார்ப்பது என் முடிவானது ஏனனில் என் அண்ணன் ஜாதகம் ஜோசியம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்,அப்படித்தான் ஒருவன் குடுபத்தோடு ஜோசியம் பார்த்து சொல்ல எனது வீட்டுக்கு வந்தான் தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் கொஞ்ச காலமாக ஒரு ஜோசிய கும்பல் கார் ,பைக் வைத்து கொண்டு ஊரை ஏமாற்றி அலைகிறது ஆனால் அவர்களுக்கு தஞ்சாவூர் சொந்த ஊர் கிடையாது அவர்கள் அனைவரும் நாயுடு சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் திண்டுக்கல் பகுதியை சார்ந்தவர்கள் என நினைக்கிறேன் எப்படி திருட்டு தொழிலை ஒரு தொழிலாக செய்யும் ஒரு குடும்பங்கள் இருக்கின்றனவோ இதே போல் ஜோசியம் சொல்லி ஏமாற்றும் குடும்பங்கள் இருக்கின்றன,அவர்கள் கணவன் மனைவி,குழந்தை என் கூட்டக வருவார்கள் ஜோசியம் சொல்பவனின் மனைவி ஜோசியம் பார்க்கும் வீட்டின் பெண்களோடு நன்றாக பழகி நம்பிக்கை தன்மையை ஏற்படித்தியும் அவர்களின் பண வசதியை கணித்தும் ஏமாற்றுவார்கள் .ஒரத்தநாடு பகுதியில் பொட்டலகுடிகாடு என்ற ஊரில் ஏராலமானவர்கள் வீட்டை வாடகை எடுத்து  தங்கி சுற்றியுள்ள பகுதிகலை ஏமாற்றி வருகிறார்கள்..

 எங்கள் வீட்டிலும் இப்படிதான் பரிகாரம் செய்கிறேன் என சொல்லி 10.000 ரூபாயை என் அண்ணனிடம் பிடிங்கி சென்றான். ஆனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே இதன் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை  அதேபோல் எந்த ஜோசியம் சொல்கிற நாய்களையும் நம்புவதும் இல்லை ஆனால் என் வீட்டில் நடந்த இந்த திருட்டை,ஏமாற்றை என்னால் தடுக்க முடியவில்லை.

 வெங்காயம் திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தொழிற்நுட்பத்திலும் சில நடிகர்களின் நடிப்பிலும் பல சொதப்பல்கள் இருந்தாலும்  கண்டிப்பாக வரவேற்கக்கூடிய படைப்பு இப்படம்

வெங்காயம் -மரமண்டையர்களுக்கானது.

தொடர்புடைய  பதிவு.



0 comments: