அரசியல் சாக்கடையில்
விதம் விதமாய் புழுக்கள்
புழுக்கள் நெளியவில்லை
நெளிவது என்னவோ நம் மனது !
கொள்கைகள் ஒன்றும் இல்லை
குறிக்கோள்கள் ஏதும் இல்லை
நன்மைகள் ஒன்றும் இல்லை
எண்ணம எல்லாம் கொள்ளை !கொள்ளை!
கோடிகள் அடித்தாலும்
கோவிலுக்கும் பங்கு உண்டு
நாட்டை கோவிந்தா ஆக்கி விட்டு
குபேரன் ஆவார்கள்!
தேர்தல் வந்தால் பல் இளிக்கும்
பல பன்றிகள் பின் தொடரும்
மேடையில் மைக் உடையும்
கோசத்தில் ஊர் கரையும்
டாஸ்மார்க் மிக நிறையும்
சால்னா கடை பணம் கொழிக்கும்
எதிரியை அண்ணன் என்பான்
கிழவியை அக்கா என்பான்
எச்சகல நாய்கள்! தேசத்தின் தூர்கள்!
ஓட்டு போட ஆத்தா தாத்தாவுக்கு பல்லக்கு
இறந்த பாட்டன் முப்பாட்டனுக்கும் ஒட்டு
ஓட்டு போட ஆத்தா தாத்தாவுக்கு பல்லக்கு
இறந்த பாட்டன் முப்பாட்டனுக்கும் ஒட்டு
தாவல்கள் பல நடக்கும்
மோதல்கள் பல நிகழும்
ஆனாலும் கொள்ளையில் என்னமோ
எல்லாம் ஓன்று
கம்பி எண்ணும் காலம் வந்தால்
சாதிக்கின் மரணமும்,
போட்டிக்கு ஆள் வந்தால்
தா .கிருஷ்ணனின் கொலையும்
சாதாரணம்
அரசியல் சாக்கடையில்
விதம் விதமாய் புழுக்கள்
புழுக்கள் நெளியவில்லை
நெளிவது என்னவோ நம் மனது !


0 comments:
Post a Comment