"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Saturday, February 5, 2011

யுத்தம் செய் - கொரிய படங்களின் வாந்தி

யு
த்தம் செய் Memory of Murder ன் காப்பி என நினைத்து இருந்தேன் ஆனால் மிஸ்கின் சில பல கொரியன் படங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து இருக்கிறார்.

படம் ஆரம்பத்திலேயே என்னகு தெரிந்து விடுகிறது கைகள் வெட்டபட்டு காட்சிக்கு வைக்கபடும் சீன்கள் No Mercy என்ற கொரியன் படத்தில் சுட்டது என்று ,அதேபோல் மார்ச்சுவரி அதிகாரி கேரக்டரும் இந்த படத்தில் இருந்து சுட்டதுதான் .

No Mercy Trailer
.

 அதேபோல் கொலையாளிகள் சித்திரவதை காட்சிகள் I saw the devil என்ற   கொரியன் படத்தில் சுட்டதுதான்,Old Boy ,The.Chaser போன்ற கொரியன் படங்களின் சாயல்களும் யுத்தம் செய் படத்தில் நெறைய உண்டு .

மிஸ்கின் கொரியன் படங்களில் இருத்து யுத்தம் செய் எடுத்து இருந்தாலும் அதை நம் சுழலுக்கு தகுத்த மாதிரி மாற்றி அதேசமயம் ஒரு உலகபடமாக கொடுத்து உள்ளார் ,  

வாழ்த்துகள் மிஸ்கின்

21 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவிகளா இதே வேலையா ஒரு கும்பலே அலையுதே......!!!
சொந்தமா ஒன்னும் யோசிக்க மாட்டாங்களோ.....

பொன் மாலை பொழுது said...

//யாருக்கும் தெரியாது //
என்ற நினைப்பில் ஏதாவது செய்தால், எங்கிருந்தாவது யாராவது குட்டை உடைத்து விடுகிறீர்களே சாமீ.!!
அவர்களும் தான் என்ன பண்ணுவார்கள்??
தான்தான் பெரிய //அறிவு சீவி// என்றும்,
//நவீன இலக்கிய வாதிகள்// என்று பீலா விடுபவர்கள் இப்படிதான் இருப்பார்கள்.
பாவம் விட்டு விடலாம்.

வருணன் said...

நண்பா... ஒரு படத்தை பிரதி எடுப்பதற்கும் பாதிப்பில் உருவாக்குவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இப்படித்தான் முன்பு புதுப்பேட்டையை City of God என்றார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. இப்போது ஏதாவதொரு gangster சினிமாவை Godfather சாயலின்றி, அதன் நினைவு பார்வையாளனுக்கு வராதவாறு எடுக்க முடியுமா? சினிமாவில் ஒரு இயக்குனன் முன் வைக்கிற கருத்து எவ்வளவு முக்கியம் என்பதை விமர்சனம் எழுதுகிறவர்கள் 90% பேர் விவாதத்துக்கே எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி சித்ரவதை காட்சியொன்றை தனது கற்பனா சக்தியை விரயம் செய்து எடுக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு இயக்குனனிடமும் அவனது படைப்பிடமும் அதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

சொல்கிறேன் என்று வருத்தம் வேண்டாம். நானும் கவனித்திருக்கிறேன். விமர்சனம் எழுதுகிற பலர் இப்படம் இந்த மொழி படத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என சொல்லும் போது, அதன் மூலமாக தாங்கள் இத்தகைய அயல் சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு ரசனை அதிகமுள்ளவர்கள் என பறைசாற்றிக் கொள்வதான தொனியிலேயே எழுதுவதாக தோன்றுகிறது. தங்களின் மனம் நோக சொல்லியிருந்தால் வருந்துகிறேன்.

Sivakumar said...

>>> வருணன் அவர்களே,வேற்று மொழி படத்தை உருவாமல் எடுக்கப்பட்டால் தவறே இல்லை. ஒருவேளை காட்சிகள் கோ இன்சிடன்ஸ் ஆக கூட இருக்கலாம். இது பொதுக்கருத்து. ஆனால், கிகுஜிரோவிற்கும், நந்தலாலாவிற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்னால்... சோ சாரி! எப்படியோ இதன் மூலம் வேற்று மொழிப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நன்றி!

PB Raj said...

@வருணன்,

உங்கள் கருத்துக்கு நன்றி!

அடுத்தவர் படத்தை காப்பி எடுப்பவர் அல்லது இன்ஸ்பிரேஷனாக எடுப்பவர் பீலா உடுவதை கொஞ்சம் குறைக்க வேண்டும் அனைவரும் முட்டாள் அவர்களை மட்டும்த அறிவாளி என நேனிக்மும் மனோபாவம் மாற வேண்டும்


என்னிக்கு தெரிந்து பெரும்பாலான தமிழ் சினிமா பிற சினிமாக்களில் இருந்து திருடிய கதைகள அல்லது கதா பத்திரங்கள்..

நந்தலாலாவை சொந்த கதை என கூறுவது எவ்வளவு மொள்ளமாரித்தனம்..

(அதன் மூலமாக தாங்கள் இத்தகைய அயல் சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு ரசனை அதிகமுள்ளவர்கள் என பறைசாற்றிக் கொள்வதான தொனியிலேயே எழுதுவதாக தோன்றுகிறது)

இருக்கலாம் அப்படி இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை, சினிமா ரசனை என்பது உடனடியாக வராது உலக சினிமாக்களை பார்க்க பார்க்கதான் வரும்

நந்தலாலாவை அவார்டு வாங்க அனுப்ப முடியுமா?

PB Raj said...

@வருணன்

உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு
புகைப்படம் கூட வைத்துக் கொள்ளவில்லையே?!
என்னுலகை முழுமையாய் அடக்க
உறைந்த அந்த ஒற்றை கணம்
எப்படி போதுமெனக்கு?
இவ்வளவு எழுதியும் உன்னைப்பற்றி
வாசிக்கும் இவர்களுக்கெல்லாம்
அறிமுகம் தானே செய்ய முடிகிறது...
உன்னை சிலாகிக்கும் என்
பிரத்தியேக மௌனத்தை எப்படி
இவர்களுக்கு புரியும் வண்ணம்

மேல உள்ள கவிதை என் கவிதை எப்படி உள்ளது ? ஹா ஹா

உங்கள் கருத்துகள் நன்று...

'பரிவை' சே.குமார் said...

Suttalum nalla padama koduththaal sarithaaney nanba.

BoobalaArun said...

@வருணன் ,

பக்காவா சொன்னீங்க. உண்மை தான், அயல் நாட்டு சினிமா பாக்குற நிறைய பேரு இதைய குறிக்கோளா வச்சு இருக்காங்க.

அப்புறம் நம்ம ராஜ் அண்ணனுக்கு,

எது எப்படியோ இப்படி நீங்க விமர்சிக்கிறதால எங்களுக்கு பல அயல் சினிமாவின் அறிமுகம் கிடைகிறது.

அதுவும் நந்தலாலா படத்த காப்பின்னு எழுதும் போது ஒரு அயல்சினிமா தான் கிடைத்தது. ஆனால் யுத்தம் செய் நாலு படங்களை தந்து இருக்கு.

எவர் எப்படி பேசினாலும் ஒரு அயல் சினிமாவை ரசித்து அதனோடு தன் ரசனையை சேர்த்து தமிழுக்கு ஏற்றாற்போல் சொல்வது எல்லாருக்கும் வந்து விடாது. அந்த வகையில் நான் என்றுமே மிஸ்கின் மற்றும் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் தான்...

PB Raj said...

@WiNnY...
நன்றி உங்கள் வருகைக்கு,
என்னுடைய ஆதங்கம் எல்லாம் படத்தின் ஆரம்பத்திலோ அல்லது முடிவுளோ அந்த உண்மையான படைப்பாளிக்கு நன்றி தெரிவிக்கலாம்.

என்னக்கும் மிஸ்கின் படங்கள் பிடிக்கும்,

PB Raj said...

@சே.குமார்

@ சே .குமார்

I agree
உங்கள் கருத்துக்கு நன்றி

PB Raj said...

MANO நாஞ்சில் மனோ
கக்கு - மாணிக்கம்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

PB Raj said...

@வினய்!

கொரியன் படங்களை பார்க்க ஆரம்பிவுங்கள் நீங்கள் சினிமா விரும்பியாக இருந்தால் கண்டிப்பாக ஒரு அனுபவம் கிடைக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கு உண்மையான போட்டி அவர்கள் தான்..

1.முக்கியமாக old Boy பாருங்கள், நோ சான்ஸ் இன் தமிழ்
2.Mother நம்ம ராம் தமிழ் மோவி
3.sassy girl-சிவா மனுசுல சக்தி

நன்றி நண்பர்.

pichaikaaran said...

கண் திறந்து பார்த்தால் இங்கேயே ஆயிரம் கதைகள் கிடைக்கும்

BoobalaArun said...

@ ராயல் ராஜ்:

நன்றி நண்பா, திரைப்படம் பார்க்கும் ஆர்வம அதிகம் உண்டு என்றாலும் எந்த படம் பார்ப்பது என்ற குழப்பம் கொண்டவன் நான்.

விமர்சம் எழுதிய படங்களை மட்டுமே நல்லா இருக்கும்னு எனக்கு தோன்றினால் தரவிரக்குவது வழக்கம். இப்படி பல கொரியன் படங்களை அறிமுகப்படுத்துங்கள். எனக்கு மட்டும் இன்றி இன்னும் நிறைய பேருக்கு வசதியா இருக்கும்.

இப்போதைக்கு Mother , i saw the devil தரவிறக்கம் ஆகிக் கொண்டுஇருக்கிறது. சீக்கிரம் மற்றதும் தரவிறக்கப்படும்.

நன்றி...

ஆதவா said...

@ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)

நண்பர் வருணனின் கருத்தே என்னுடையதும்.. அதற்காக நந்தலாலா கிகுஜிரோவின் காப்பியல்ல என்று மறுக்கமாட்டேன். ஆனால் சாஸ்ஸி கர்லுக்கும் சிவா மனசுல சக்திக்கும் ரூட் போட்டதுதான் காமெடி.... சாஸி கர்லில் ஒரே ஒரு காட்சி மட்டுமே சிவா மனசுல சக்தியில் காப்பியடிக்கப்பட்டிருக்கும். முழுபடமுமல்ல. அதேசமயம், காட்சிப்படுத்துதலிலும் இரண்டும் மாறுபடும். அதை ஒரு இன்ஸ்ப்ரேஷனாக எடுத்துக் கொள்ளலாம்... கமல் போன்றவர்கள் முழுக்க முழுக்க காப்பியடிக்கும்பொழுது இதெல்லாம் எவ்வளவோ தேவலை

ஆதவா said...

@ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)

நண்பர் வருணனின் கருத்தே என்னுடையதும்.. அதற்காக நந்தலாலா கிகுஜிரோவின் காப்பியல்ல என்று மறுக்கமாட்டேன். ஆனால் சாஸ்ஸி கர்லுக்கும் சிவா மனசுல சக்திக்கும் ரூட் போட்டதுதான் காமெடி.... சாஸி கர்லில் ஒரே ஒரு காட்சி மட்டுமே சிவா மனசுல சக்தியில் காப்பியடிக்கப்பட்டிருக்கும். முழுபடமுமல்ல. அதேசமயம், காட்சிப்படுத்துதலிலும் இரண்டும் மாறுபடும். அதை ஒரு இன்ஸ்ப்ரேஷனாக எடுத்துக் கொள்ளலாம்... கமல் போன்றவர்கள் முழுக்க முழுக்க காப்பியடிக்கும்பொழுது இதெல்லாம் எவ்வளவோ தேவலை

PB Raj said...

நன்றி ஆதவா!

saay Girllஇல் ஒரு காட்சி ,பிறகு நாம் பார்க்காத பிற படங்களில் இருந்து பல காட்சிகள் என மிக்ஸ் செய்தி ஒரு படம் என காப்பி எடுத்து படம் எடுப்பது அயோக்கியத்தனம் இல்லையா?

பிற நாட்டு படங்களின் இயக்குனர்களின் Profile யை படித்து பாருங்கள். நாம் ஆட்களின் எங்கே இருக்கு ப்ரோபில்..

நம் நாட்டு அரசியல் எப்படியோ எப்படித்தான் தமிழ் சினிமாவும் ....பிழைக்க தெரியாதவர்களின் குடில்..

நன்றி உங்கள் வருகைக்கு நண்பா..

PB Raj said...

நன்றி ஆதவன்,,

உங்கள் http://ciniversal.blogspot.com/ வெப்சைட்ன் ரசிகன் நான் ...

ஆதவா said...

@ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)

நண்பா... முழுக்கவும் காப்பியடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை... இன்ஸ்பிரேய்சன் ஆகலாம். ஆனால் SMS இன்ஸ்பிரேய்சன் என்று சொல்ல முடியாது. அதேசமயம் ஒரு காட்சி வந்ததால் படம் முழுக்க காப்பி என்று சொல்லவும் முடியாதில்லையா... மற்ற படங்களின் காப்பி என்றால் அதனை நாம் நிருபிக்க வேண்டுமில்லையா...

மிக்க நன்றிங்க. இப்ப சினிவர்சல் தளத்தில் எழுதறதில்லை.. இனிமேல் குழந்தை ஓவியத்திற்கு வரவும். “aadav.blogspot.com"

PB Raj said...

@ஆதவன்

வந்தாச்சி

வருணன் said...

//பிற நாட்டு படங்களின் இயக்குனர்களின் Profile யை படித்து பாருங்கள். நாம் ஆட்களின் எங்கே இருக்கு ப்ரோபில்..//

நிச்சயம்மாக இது கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது ஒரு கலை என்றபோதிலும் அதன் ஆதாரமாக பணம் இருக்கிறது என நாம் மறக்கக் கூடாது.

அயல் நாட்டு சினிமாக்களில், குறிப்பாக விருதுகள் பெற்ற, உலக சினிமா எனப் வகைப்படுத்தப்படும் சினிமாக்களை உருவாக்குவது யார்? அவற்றுள் பல கூட்டுத் தயாரிப்புக்களே. இதில் பல படங்களுக்கு அந்தந்த நாட்டு கலாச்சாரத் துறை பொருளுதவி செய்கிறது.

நமது நாட்டில் நிலை என்ன? உலக சினிமாவை பொருத்தவரை, இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒரு பெயர் சத்ய ஜித்ரே. அவரது உலகப் புகழ் பெற்ற ‘ பதேர் பாஞ்சலி’(Song of the Little Road) உருவான கதை தெரியுமில்லையா! ஒரு நல்ல நாவலை படமாக எடுக்க யாருமே முன் வராத நிலையில் கடைசியில் அக்கலைஞனுக்கு வங்காள மாநில அரசு அப்படத்தை தயாரித்து உதவியது...

சினிமா வளராதற்கு சும்மா சும்மா இயக்குனர்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனம் இல்லை தோழா. இன்னும் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது பார்வையாளனின் ரசனையும், நல்ல படைப்புக்கு அவன் தரும் அங்கீகாரமும்...( குறை மட்டுமே சொல்வது அல்ல.)

Old Boy பற்றியெல்லாம் ஒரு நண்பர் பகிர்ந்திருக்கிறார். அதுபோல் தமிழில் Chance-ஏ இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு படத்தை நமது தணிக்கைத் துறை அனுமதிக்கும் என எந்த அடிப்படையில் நீங்கள் நம்புகிறீர்கள்? அது போகட்டும் ‘Old Boy' என்பது ஒரு Trilogy என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை.

இதை எல்லாம் பார்க்கையில் சினிமாவிற்கென ஒரு தனி வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு மேலோங்குகிறது. ஆசிரியப் பணிக்கிடையே நேரமிருப்பின் நிச்சயம் செய்ய வேண்டும் போல தோன்றுகிறது.

ஆனால் இவ்வளவு பேர் நல்ல சினிமாவை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உவப்பான செய்தியே !

தொடர்ந்து புரிந்து கொள்வோம் நல்ல சினிமாவை...