"No Real Change in History has ever achieved by Discussions"
சூழ்ச்சிகளால் பெற்ற எதுவும் !
சூழ் கொடு சாகும்.


Font Size

Monday, August 25, 2014

ரயில் சிநேகம்



   அவள் ஒன்றும் கிறங்க வைக்கும் அழகு இல்லை ஆனால் திரும்பி பார்க்க வைக்கும் அழகு.
நீண்ட நாட்களாக அவள் எனக்கு பரிச்சயம் பெரும்பாலான நாட்களில் நான் பயணிக்கும் மின்சார வண்டியில்தான் அவளும் பயணிக்கிறாள் ஆனாலும் இருவரும் பேசிகொண்டது இல்லை,நாங்கள் பார்வைகளை மட்டும் பரிமாறியது உண்டு..

   ஒரு அதிகாலை மழை நாளில் இருவரும் அருகருகே அமரும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையான சந்தோசம் கலந்த சங்கடதொடுதான் அவளருகே
அமர்ந்தேன் .மழை நேரத்து அதிமேதுவான ரயில் பயணத்தில் அலுவலகம் செல்லும் மனிதர்களின் நெருக்கத்துடனும் , சிறு சிறு உறசல்களுடனும் தொடர்ந்த எங்கள் பயணம் ஒரு நகர மண்டப நிறுத்தத்தில் முடிந்தது ,
ஒருசில நாட்களுக்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் இன்று 
சந்திக்கும் வாய்ப்பு அதே ரயில் பயணத்தில் கிடைத்தது.இருவரும் ஒருவித புன்முறுவலுடன் எதிர்கொண்டோம். ஒரு நீண்ட மவுனத்திற்கு பிறகு அவளாக என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

   கடந்த நான்கு வருடங்களாக ஒரு சிங்கபூர் மருத்துவமனையில் தாதியாக வேலை செய்வதாகவும் இரண்டு வருடங்க்களுக்கு ஒரு முறை இந்தியா செல்வதாகவும் ,வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொல்லியவள் என்னை நீங்கள் திருமணம் செய்ய விருப்பமா என எதிபார்க்காத தருணத்தில் என்னிடம் வினவினாள்.

   இதை எப்படி எதிர்கொள்வது என திணறிய நான் சுதாரித்து கொண்டு எனக்கு சம்மதம் அனால் நான் உங்களை திருமணம் செய்வதாக இருந்தால் நீங்கள் மூன்று பேரிடம் அனுமதி வாங்க வேண்டும் என கூறினேன் அதற்க்கு நானே அவர்களிடம் பேசி அனுமதி வாங்குகிறேன் எனகூறி அவர்களின் தொடர்பு எண்களை என்னிடம் கேட்டாள்.

   சரி என்று நானும் அவர்கள் தொலைபேசி எண்களை அவளிடம் கொடுத்து விட்டு அமைதியாக வீடு வந்து விட்டேன்...பாவம் அவளுக்கு தெரியாது நான் அவளிடம் கொடுத்தது என் மனைவி ,மகள் ,மகன் தொடர்பு எண்கள் என்று ...
நாளை அவள் ரயில் ஏறுவாளா! இல்லை என் குடும்பம் விமானம் ஏறுமா என தெரியவில்லை...ப.பா.ராஜ்

0 comments: