படு பாவி பய !
இடியமீன் மகன் !
பத்து வட்டி போட்டான்.
என் பட்டாவையும் கேட்டான்.
பாவம் கூட பார்க்காம !
என் மாராப்பையும் பார்த்தான் !
பச்ச புள்ள குடிக்க பால் மார்பில் இல்ல !
மாற்று பால் வாங்குற வக்கும் என்னிடம் இல்ல !
பத்துக்குபத்து குழி வெட்ட தோன்றுது மனசு!
ஆனா பெத்த புள்ளைய நினைச்சு கலங்குது மனசு !
பத்தரை மாத்து தங்கம் பசியில் மயங்கிடுச்சி !
பத்தரை மணிக்கு தூங்கி ரொம்ப நாள் ஆச்சி !
துக்கதில தூக்கம் வந்தா தூங்கி விடலாம் !
தூக்கதிலும் துக்கம் வந்தா என்ன நான் செய்ய !
பொழுதும் விடிந்து விடுமே !
பசிக்க துவங்கி விடுமே !
கடவுள் ஓன்று இருந்தால்
அவன் கண்ணை குத்தனுமே!
நீ எங்கே போன சாமி !
ஏன் கல்லாய் ஆனாய் சாமி!

0 comments:
Post a Comment